‘ஜெயம்’ ரவியின் ‘அப்பா டக்கர்’ ஷூட்டிங் முடிந்தது!

‘ஜெயம்’ ரவியின் ‘அப்பா டக்கர்’ ஷூட்டிங் முடிந்தது!

செய்திகள் 20-Jun-2015 10:14 AM IST VRC கருத்துக்கள்

சுராஜ் இயக்கத்தில் ‘ஜெயம்’ ரவி, த்ரிஷா, அஞ்சலி முதலானோர் நடித்து வரும் ‘அப்பா டக்கர்’ படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த சில நாட்களாக சென்னையிலுள்ள பின்னி மில்லில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வந்தது. ஒரு இடைவேளைக்கு பிறகு ‘லட்சுமி மூவி மேக்கர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசை அமைக்கிறார். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளில் பிசியாகியுள்ள படக் குழுவினர் விரைவிலேயே இப்படத்தின் டீசர் மற்றும் இசையை வெளியிடவுள்ளனர். ‘ஜெயம்’ ரவி நடித்து சமீபத்தில் வெளியான ‘ரோமியோ ஜூலியட்’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று ஓடிக்கொண்டிருப்பதால் மிக்க மகிழ்ச்சியில் இருக்கிறார் ‘ஜெயம்’ ரவி. இவரது நடிப்பில் அடுத்து இந்த படம் தவிர ‘ஜெயம்’ ராஜா இயக்கி வரும் ‘தனி ஒருவன்’ மற்றும் ‘பூலோகம்’ ஆகிய படங்கள் ரிலீசாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சக்க போடு போடு ராஜா - டிரைலர்


;