100 ஆண்டு சினிமாவில் பொன்விழா கண்ட சிவகுமார்!

100 ஆண்டு சினிமாவில் பொன்விழா கண்ட சிவகுமார்!

கட்டுரை 19-Jun-2015 3:06 PM IST VRC கருத்துக்கள்

தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களை பட்டியலிட்டால் அதில் நடிகர் சிவகுமாருக்கு தனி ஒரு இடம் இருக்கும்! 1965-ஆம் ஆண்டு வெளியான ‘காக்கும் கரங்கள்’ படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் நடிகராக அறிமுகமான சிவகுமார் நடிக்க வந்து இப்போது 50 ஆண்டுகள் நிறைவடைகிறது! ‘காக்கும் கரங்கள்’ படத்தை தொடர்ந்து நூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள், பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ள சிவகுமாருக்கு தமிழக அரசு விருது, ஃபிலிம் பேர் விருது உட்பட பல விருதுகள், கௌரவங்கள் கிடைத்துள்ளன. இவர் கடைசியாக நடித்து வெளியாகிய திரைப்படம் ‘பூவெல்லாம் உன்வாசம்’. அஜித் கதாநாயகனக நடித்த இப்படம் 2001-ல் வெளியானது. இந்த படத்தை தொடர்ந்து ஏராளமான பட வாய்ப்புகள் இவரை தேடி வந்தாலும் அவற்றையெல்லாம் தவிர்த்துவிட்டு தனது குடும்பத்தையும், பிள்ளைகளையும் வழி நடத்திச் செல்வதில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

இன்று நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோருக்கு சினிமாவில் நல்ல ஒரு வழிகாட்டியாகவும், சிறந்த ஒரு குடும்பத் தலைவராகவும் திகழ்ந்து வரும் சிவகுமார் சினிமாவிலாகட்டும், தனிப்பட்ட வாழ்க்கையிலாகட்டும் பல நற்பண்புகளை, நெறிமுறைகளை கடைபிடித்து மற்றவர்களுக்கு உதாரண புருஷனாக விளங்கி வருபவர். சினிமாவில் நடிக்க வரும் ஒவ்வொருவரும் தான் வாழ்க்கையில் முன்னேற எப்படிப்பட்ட நெறிமுறைகளை கடை பிடிக்க வேண்டும் என்றால் அவர்கள் நடிகர் சிவகுமாரது நற்பண்புகளை, நெறிமுறைகளை கடைபிடித்தாலே போதும்!

இந்திய சினிமாவின் 100 ஆண்டு கால வரலாற்றில் நடிகர் சிவகுமாரின் 50 வருட கால பங்களிப்பு நிச்சயம் போற்றத்தக்கது தான்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீரன் அதிகாரம் ஒன்று - Trailer


;