காஜலுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

காஜலுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

செய்திகள் 19-Jun-2015 12:19 PM IST VRC கருத்துக்கள்

இயக்குனர் பாரதிராஜாவால் தமிழ் சினிமாவிற்கு அழைத்துவரப்பட்டவர் நடிகை காஜல் அகர்வால்! பாரதிராஜா இயக்கத்தில் ‘பொம்மலாட்டம்’ என்ற படத்தில் நடித்த காஜல் அகர்வால் தொடர்ந்து, பரத்துடன் ‘பழனி’, கார்த்தியுடன் ‘நான் மகான் அல்ல’, சூர்யாவுடன் ‘மாற்றான்’, விஜய்யுடன் ‘ஜில்லா’ உட்பட பல படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடத்தை பிடித்துக் கொண்டவர்! தற்போது தனுஷுடன் ‘மாரி’, விஷாலுடன் ‘பாயும் புலி’ ஆகிய படங்களில் நடித்து வரும் காஜல் அகர்வால் பிறந்த தினம் இன்று! பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் திரையுலகினரின் வாழ்த்துக்களுடன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடும் காஜல் அகர்வாலுக்கு ‘டாப் 10 சினிமா’வும் தனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - மாஜோ ஆடியோ பாடல்


;