‘‘கௌதமியை வீட்டில் பூட்டி வைத்து விட்டோம்’’ – கமல்ஹாசன் வருத்தம்!

‘‘கௌதமியை வீட்டில் பூட்டி வைத்து விட்டோம்’’ – கமல்ஹாசன் வருத்தம்!

செய்திகள் 19-Jun-2015 11:38 AM IST VRC கருத்துக்கள்

மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘திருசியம்’. இப்படத்தை தமிழில் கமல்ஹாசன், கௌதமி, டெல்லி கணேஷ், எம்.எஸ்.பாஸ்கர், நிவேதா தாமஸ் மற்றும் பலர் நடிக்க, ‘பாபநாசம்’ என்ற பெயரில் இயக்கியுள்ளார் ‘திருசியம்’ படத்தை இயக்கிய அதே ஜீத்து ஜோசஃப். விரைவில் ரிலீசாகவிருக்கும் ‘பாபநாசயம்’ படம் சம்பந்தமான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது கமல்ஹாசன் பேசும்போது,
‘‘இந்தப் படத்தை நான் மட்டுமே செய்ததாக எல்லோரும் பேசினார்கள். ஆனால் இந்தப் படம் பல பாத்திரங்களில் செய்த சமையல். ஏற்கெனவே இந்தப் படம் மூன்று மொழிகளில் வெற்றியடைந்த கதை. அந்த கதையை கொண்டுவந்து கொடுத்தார்கள். நாங்க இணைந்து அதை இன்னமும் அழகாக செய்திருக்கிறோம். ஒரு இடைவெளைக்குப் பிறகு இப்படத்தில் கௌதமி நடித்திருக்கிறார். இந்த படத்தில் அவருடைய நடிப்பை பார்த்தபோது, இவ்வளவு நாள் அவரை வீட்டில் வைத்து பூட்டி விட்டோமா என்று எனக்கு இப்போது வருத்தமாக இருக்கிறது.

‘பாபநாசம்’ படத்தை திருநெல்வேலியில் எடுக்க காரனம் வித்தியாசமாக இருக்கட்டும் என்று தான்! இப்படத்தில் எல்லோரும் திருநெல்வேலி வட்டார மொழி பேசி நடித்திருக்கிறோம். அதற்கு உறுதுணையாக இருந்தவர் எழுத்தாளர் சுகா. திருநெல்வேலி ஸ்லாங் பேச கஷ்டமாக இருந்ததா என்றால், கஷ்டமாக இல்லை என்று சொன்னால் ஈஸியா பேசிவிட்டதாக நினைப்பீர்கள். நிறைய கஷ்டப்பட்டு, கத்துக்கிட்டு தான் பேசியிருக்கிறோம்’’ என்றார்.

இந்த நிகழ்ச்சியில் இப்படத்தை தயாரித்திருக்கும் நடிகை ஸ்ரீப்ரியா, அரது கணவர் ராஜ்குமார் சேதுபதி, ஜார்ஜ் பயஸ், சுரேஷ் பாலாஜி குடும்பத்தினர் மற்றும் இப்படத்திற்கு இசை அமைத்திருக்கும் ஜிப்ரான், பாடலாசிரியர் நா.முத்துக்குமார், ஒளிப்ப்திவாளர் சுஜித் வாசுதேவ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;