11 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் வெளியாகும் தனுஷ், சிம்பு படங்கள்!

11 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் வெளியாகும் தனுஷ், சிம்பு படங்கள்!

செய்திகள் 19-Jun-2015 11:18 AM IST VRC கருத்துக்கள்

சிம்பு நடித்திருக்கும் ‘வாலு’ படம் பல ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்படும், அந்த தேதிகளில் படம் ரிலீசாகவில்லை! இதற்கு இப்படம் சம்பந்தமான வியாபார பிரச்சனைகள் தான் காரணம் என்று கூறப்பட்டது! சமீபகாலத்தில் சிம்பு கெஸ்ட் ரோலில் நடித்த ஒரு சில படங்களே வெளியாகியுள்ளன. சிம்பு நடிப்பில் ஒரு முழு நீள படத்தை பார்த்து பல நாட்கள் ஆகிவிட்ட நிலையில் சிம்புவின் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்தில் இருந்தனர்! ஆனால் இப்போது சிம்புவின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதாவது ‘வாலு’ படம் அடுத்த மாதம் (ஜூலை) 17-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது என்பது தான்! ‘வாலு’விற்கு வியாபார சிக்கல் ஏற்பட்டு வெளியாகாமல் காலதாமதமானதால் இப்படத்தை எப்பாடியாவது ரிலீஸ் செய்ய வேண்டும் என்று சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் முயற்சி எடுத்துள்ளார். இதனை தொடர்ந்து ‘வாலு’ படத்தை தனது ‘சிம்பு சினி ஆர்ட்ஸ்’ நிறுவனம் மூலம் ஜூலை 17-ஆம் தேதி வெளியிடுகிறார். இது சம்பந்தமான அதிகாரபூர்வ அறிவிப்புடன் ‘வாலு’ விளம்பரங்கள் தற்போது வந்து கொண்டிருக்கிறது. இது சிம்பு ரசிகர்களை மகிழ்ச்சிபடுத்தியுள்ளது.

இதே தினம் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘மாரி’ படமும் ரிலீசாக இருக்கிறது என்று கூறப்படுகிறது. தனுஷ் நடித்த ‘ட்ரீம்ஸ்’ படமும், சிம்பு நடித்த ‘மன்மதன் ’படமும் ஒரே நாளில் தான் வெளியானது. இந்த இரண்டு படங்களும் கடந்த 2004, நவம்பர் மாதம் 12-ஆம் தேதி வெளியானது. சிம்புவின் ‘வாலு’ படமும் தனுஷின் ‘மாரி’ படமும் வருகிற ஜூலை 17 ஆம் தேதி ரிலீசாகும் பட்சத்தில் கிட்டத்தட்ட 11 ஆண்டுகள் கழித்து தனுஷ், சிம்பு படங்கள் ஒரே தினம் வெளியாகி மோத இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;