ஹரியின் உதவியாளர் இயக்கும் படம்!

ஹரியின் உதவியாளர் இயக்கும் படம்!

செய்திகள் 19-Jun-2015 10:36 AM IST VRC கருத்துக்கள்

‘நாளைய இயக்குனர் சீசன் 3’ல் பங்கேற்றவரும், இயக்குனர் ஹரியிடம் ‘சிங்கம் 2’ படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவருமான பிரசாந்த் ‘யானும் தீயவன்’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகிறார். முழுக்க முழுக்க கமர்ஷியல் ஆக்ஷன் த்ரில்லராக இப்படம் உருவா இருக்கிறதாம்!

இப்படத்தில் புதுமுகம் அஸ்வின் கதாநாயகனாக அறிமுகமாக, வர்ஷா கதாநாயகியாக நடிக்கின்றார். முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடன கலைஞரும் நடிகருமான ராஜுசுந்தரம் நடிக்கிறார். இவர்களுடன் விடிவி கணேஷ், பொன்வண்ணன் ஆகியோரும் நடிக்கின்றனர்.

பிரபல தெலுங்கு திரையுலக இசையமைப்பாளரான அச்சு ராஜாமணி இப்படத்திற்கு இசை அமைக்கிறார். ஒளிப்பதிவை ஷ்ரேயாஸ் கவிக்க, படத்தொகுப்பை பிரசன்னா.G.K. கவனிக்கிறார். பாடல்களை கபிலன், மணி அமுதவன் எழுதுகின்றனர்.

இப்படத்தின் முதல் பார்வை படங்களை பிரபல புகைப்பட கலைஞர் ஜி.வெங்கட்ராம் வடிவமைத்து படமாக்கினார். இப்படத்தை “ஸோபியா ஜெரோம்’ மற்றும் பெப்பிட்டா ஜெரோம் “பெப்பி சினிமாஸ்” சார்பாக இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தின் படபிடிப்பு 22ஆம் தேதி துவங்கவுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அன்பானவன் அடங்காதவன் அசராதவன் - அஸ்வின் தாத்தா டீசர்


;