விஜய்யின் அட்வான்ஸ் பிறந்த நாள் பரிசு!

விஜய்யின் அட்வான்ஸ் பிறந்த நாள் பரிசு!

செய்திகள் 19-Jun-2015 10:05 AM IST VRC கருத்துக்கள்

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘புலி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும டீஸரை விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக ஓரிரு நாட்களுக்கு முன்பு படத்தின் இயக்குனர் சிம்பு தேவன் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார். இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். இந்நிலையில் விஜய் ரசிகர்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது. அதாவது ‘புலி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை விஜய்யின் பிறந்த நாளுக்கு ஒரு நாள் முன்னதாக அதாவது, ஜூன் 20 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். அதனை தொடர்ந்து படத்தின் டீஸரை விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 21-ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கும் வெளியிடுகிறார்கள். இதனை ‘புலி’ படக் குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். இதனால் விஜய் ரசிகர்கள் மேலும் மகிழ்ச்சிக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

பெரும் பொருட் செலவில் தயாராகியுள்ள ‘புலி’ படத்தில் விஜய்யுடன் ஹன்சிகா மோத்வானி, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் மற்றும் பலர் நடிக்க, நட்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்துள்ளார். . ‘எஸ்.கே.டி.ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் இப்படத்தை பி.டி.செல்வகுமார் மற்றும் ஷிபு தமீன் இணைந்து தயாரித்துள்ளார்கள். இவர்கள், ‘புலி’ படத்தை வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சென்னை 28 II காட்சிகள் - வீடியோ


;