அஜித் ரசிகர்களுக்கு அனிருத் தரும் பர்த்டே ஸ்பெஷல்!

அஜித் ரசிகர்களுக்கு அனிருத் தரும் பர்த்டே ஸ்பெஷல்!

செய்திகள் 18-Jun-2015 1:26 PM IST VRC கருத்துக்கள்

‘வீரம்’ சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பு முடிந்ததும் இப்படக் குழுவினர் அடுத்த மாதம் (ஜூலை) கொல்கத்தா பறக்கவிருக்கின்றனர். இப்படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதால் பட வேலைகளை விறுவிறுப்பாக செய்து வருகின்றனர். அஜித், இயக்குனர் சிவா ஆகியோருடன் இந்த படத்தின் மூலம் முதன் முதலாக கூட்டணி அமைத்துள்ள இசை அமைப்பாளர் அனிருத், இப்படத்தின் எல்லாப் பாடல்களையும் ஹிட்டாக்க வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்து செயல்பட்டு வருகிறார். வருகிற அக்டோபர் 16-ஆம் தேதி அனிருத் பிறந்த நாள்! அன்றைய தினம் இப்படத்தின் பாடல்களை வெளியிட இப்படக் குழுவினர் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. ‘ஆரம்பம்’, ‘என்னை அறிந்தால்’ படங்களை தொடர்ந்து ஏ.எம்.ரத்னம் தயரிக்கும் இப்படத்தில் அஜித்துடன் ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் முதலானோர் நடித்து வருகிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - ட்ரைலர்


;