அஜித், விஜய் ரசிகர்களைத் தொடர்ந்து சிம்பு ரசிகர்கள்!

அஜித், விஜய் ரசிகர்களைத் தொடர்ந்து சிம்பு ரசிகர்கள்!

செய்திகள் 18-Jun-2015 10:20 AM IST Chandru கருத்துக்கள்

சத்தமில்லாமல் சாதித்துவிட்டார்கள் சிம்பு ரசிகர்கள். ‘வாலு’ படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற ஏக்கத்தைப் போக்கும் விதமாக, செல்வராகவனின் ‘கான்’ பட ஃபர்ஸ்ட் லுக் அதிரடியாக வெளியிடப்பட்டது. நெற்றியில் பட்டை, கழுத்தில் ருத்ராட்சம், பச்சை சட்டை என சிம்புவின் வித்தியாசமான கெட்அப்புடன் கூடிய ‘கான்’ போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்க வரவேற்பு. ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த இணையதளங்கள், பல பிரபலங்கள் இந்த போஸ்டரை ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் பகிர்ந்தனர்.

இதனால் ‘கான்’ போஸ்டர் வெளியான ஒரு சில நிமிடங்களிலேயே #KAANFirstLook என்ற ட்விட்டர் டேக் இந்திய அளவில் முதலிடத்திலும், அதனைத் தொடர்ந்து உலகளவிலான டிரென்ட்டில் 5வது இடத்தையும் பிடித்து அசத்தியது. சிம்பு ரசிகர்கள் மட்டுமின்றி, அஜித் ரசிகர்களும் இணைந்து இந்த டேக்கைப் பயன்படுத்தி போஸ்ட் போட்டதே உலகளவில் டிரென்ட் ஆனதற்குக் காரணமாம். அஜித், விஜய் ரசிகர்களைத் தொடர்ந்து சிம்பு ரசிகர்களும் உலகளவில் தங்கள் நாயகனின் பெயரை உச்சரிக்க வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;