‘ஆயிரத்தில் ஒருவனி’ன் 2ம் பாகமா சிம்புவின் ‘கான்’?

‘ஆயிரத்தில் ஒருவனி’ன் 2ம் பாகமா சிம்புவின் ‘கான்’?

செய்திகள் 17-Jun-2015 5:16 PM IST Chandru கருத்துக்கள்

‘இரண்டாம் உலகம்’ படத்திற்குப் பிறகு செல்வராகவன் சிம்புவை வைத்து இயக்கும் படத்திற்கு ‘கான்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ‘க்ளோ ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பாக செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலியும், சித்தார்த்தும் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள். அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். கடந்த சில வாரங்களாக பரபரப்பாக நடைபெற்றுவந்த இப்படத்தின் படப்பிடிப்பைத் தொடர்ந்து தற்போது ‘கான்’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

பின்னணியில் பழங்கால கோவில் கோபுரம் ஒன்று இருக்க அதன் கீழே மக்கள் கூட்டம் கும்பிடுவதுபோலும், வலபுறம் நெற்றியில் பட்டை, கழுத்தில் ருத்ராட்சத்துடன் சிம்பு வணங்குவது போலவும் இப்போஸ்டர் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதோடு ‘கான்’ என்ற டைட்டிலுக்குக் கீழே ‘காடும் காடு சார்ந்த இடமும்’ (முல்லை) என்ற டேக் லைன் இடம்பெற்றிருக்கிறது. இப்படத்தின் போஸ்டரையும் அது தரும் உணர்வையும் பார்க்கும்போது ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் 2ஆம் பாகத்தின் கதையைத்தான் செல்வராகவன் சிம்புவிற்காக சற்று மாற்றி ‘கான்’ படமாக எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் எதுவும் இல்லை.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சக்க போடு போடு ராஜா - டிரைலர்


;