பேய் படத்தில் விஜய்சேதுபதியின் பாடல்

பேய் படத்தில் விஜய்சேதுபதியின் பாடல்

செய்திகள் 17-Jun-2015 4:27 PM IST Chandru கருத்துக்கள்

‘அவ்னி சினிமேக்ஸ்’ நிறுவனம் மூலம் இயக்குனர் சுந்தர்.சி. தயாரிப்பில், அறிமுக இயக்குனர் பாஸ்கர் இயக்கும் படத்திற்கு ‘ஹலோ... நான் பேய் பேசுறேன்!’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. வைபவ் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் ஓவியா, ஐஸ்வர்யா ராஜேஷ் என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். இவர்களுடன் ‘விடிவி’ கணேஷ், கருணாகரன் ஆகியோர் காமெடிக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இப்படத்திற்கு ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ புகழ் சித்தார்த் விபின் இசையமைக்கிறார். இவருடைய இசையில் உருவான பாடலை நடிகர் விஜய்சேதுபதி பாடிக் கொடுத்துள்ளார். தான் தயாரித்து நடித்திருக்கும் ‘ஆரஞ்சு மிட்டாய்’ படத்தைத் தொடர்ந்து இப்படத்தில் விஜய் சேதுபதி பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நிபுணன் - டிரைலர்


;