சிவகார்த்திகேயனைத் தொடர்ந்து விஜய்க்காக தேவா

சிவகார்த்திகேயனைத் தொடர்ந்து விஜய்க்காக தேவா

செய்திகள் 17-Jun-2015 12:50 PM IST Chandru கருத்துக்கள்

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ‘புலி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் வரும் 22ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. அந்த சந்தோஷத்தில் இருக்கும் இளையதளபதி ரசிகர்களுக்கு மேலும் ஒரு சர்ப்ரைஸாக ‘விஜய் 59’ குறித்த தகவல்களும் வெளியாகி வருகின்றன. தற்போது லண்டனுக்கு குடும்பத்துடன் சென்றிருக்கும் விஜய் விரைவில் சென்னை திரும்ப இருக்கிறாராம். பின்னர் ஒரு சில நாட்கள் ஓய்வுக்குப் பிறகு மீண்டும் ‘புலி’ வேலைகளைத் துவங்க இருக்கிறார்.

அதேநேரம் இன்னொருபுறம் அட்லி இயக்கத்தில் தான் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் வேலைகளையும் கவனிக்க இருக்கிறாராம் விஜய். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் 50வது படமான இதில் ‘தேனிசைத் தென்றல்’ தேவா குத்துப்பாடல் ஒன்றைப் பாடவிருக்கிறாராம். ‘மான்கராத்தே’ படத்தில் சிவகார்த்திகேயனுக்காக ‘சரிகமபதநிச...’ டாஸ்மாக் பாடலைப் பாடிய தேவா, இப்போது விஜய்க்காக பாடவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;