50 பேய்களுடன் ஸ்ரீகாந்த், ராய்லட்சுமி மோதல்!

50 பேய்களுடன் ஸ்ரீகாந்த், ராய்லட்சுமி மோதல்!

செய்திகள் 17-Jun-2015 12:11 PM IST VRC கருத்துக்கள்

‘மைனா’, ‘சாட்டை’, ‘மொசக்குட்டி’ படங்களை தொடர்ந்து ‘ஷாலோம் ஸ்டுடியோஸ்’ ஜான்மேக்ஸ் தயாரிக்கும் படம் ‘சவுகார்பேட்டை’. இப்படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக வித்தியாசமான வேடமேற்று நடிக்கிறார். கதாநாயகியாக ராய்லட்சுமி நடிக்கிறார். இவர்களுடன் வடிவுக்கரசி, சரவணன், விவேக், அப்புகுட்டி, கோட்டாசீனிவாசராவ், சம்பத், கோவை சரளா, சுமன், பவர்ஸ்டார் சீனிவாசன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ‘தலைவாசல்’ விஜய், ரேகா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கும் வடிவுடையான் படம் குறித்து கூறும்போது, ‘‘சவுகார்பேட்டை’ படம் இதுவரை ஸ்ரீகாந்த் நடித்த படங்களை விட அதிக பொருட்செலவில் தயாராகி வருகிறது. இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சிக்காக மூலகொத்தலம் சுடுகாட்டில் ஸ்ரீகாந்த், ராய் லட்சுமி இருவரும் ஐம்பது பேய்களுடன் அதிரடியாக மோதும் படு பயங்கர சண்டைக்காட்சி படமாகிறது. எட்டு கேமராக்கள் கொண்டு பத்து நாட்கள் இந்த சண்டைக் காட்சியை கனல் கண்ணன் படமாக்குகிறார். அதிரடியான பேய் படமாக ‘சவுகார்பேட்டை’ உருவாகி வருகிறது’’ என்றார். இப்படத்திற்கு ஜான் பீட்டர் இசை அமைக்கிறார். சீனிவாசரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பெங்களூர் நாட்கள் - பரபரப்பா ஒரு ஊரு பாடல் வீடியோ


;