சூர்யாவின் ‘சிங்கம்-3’ புதிய தகவல்!

சூர்யாவின் ‘சிங்கம்-3’ புதிய தகவல்!

செய்திகள் 17-Jun-2015 12:44 PM IST VRC கருத்துக்கள்

தற்போது விக்ரம் குமார் இயக்கத்தில் ‘24’ படத்தில் நடித்து வரும் சூர்யா, இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் ஹரி இயக்கும் ‘சிங்கம்-3’ படத்தில் நடிக்க இருக்கிறார். ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ஐந்தாவது படம் ‘சிங்கம்-3’. இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற செப்டம்பர் மாதம் துவங்கவிருக்கிறது. ‘சிங்கம்’ மற்றும் ‘சிங்கம்-2’ படங்களில் சூர்யாவுடன் இணைந்து நடித்த அனுஷ்கா, ‘சிங்கம்-3’ படத்திலும் நடிக்கிறார். ‘சிங்கம்-3’ படத்தில் இன்னொரு நாயகியாக ஸ்ருதி ஹாசனும் நடிக்கிறார். ‘ஏழாம் அறிவு’ படத்திற்குப் பிறகு சூர்யாவும், ஸ்ருதிஹாசனும் மீண்டும் இணைந்து நடிக்கும் படம் இது. ‘சிங்கம்’ மற்றும் ‘சிங்கம்-2’ படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசை அமைத்திருந்தார். ஆனால், ‘சிங்கம்-3’ படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். சூர்யா நடிக்கும் படத்திற்கும், ஹரி இயக்கும் படத்திற்கும் அனிருத் இசை அமைப்பது இதுதான் முதல் முறை! ‘சிங்கம்’ படத்தை தயாரித்த ‘ஸ்டியோ கிரீன்’ நிறுவனமே சூர்யாவின் ‘சிங்கம்-3’ படத்தையும் தயாரிக்கிறது! இப்படத்தில் ‘சிங்கம்-2’வில் நடித்த ராதாரவி, நாசர் முதலானோரும் நடிக்க இருக்கிறார்கள். ‘சிங்கம்-3’ படத்தின் முக்கிய காட்சிகளை தமிழகத்தில் தூத்துக்குடி, காரைக்குடி ஆகிய பகுதிகளில் படமாக்க இருப்பதோடு பிரான்சு நாட்டின் தலைநகரான பாரிஸிலும் சில காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளார் ஹரி!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - டீசர்


;