ஜூன் 18ல் ரசிகர்களை மிரட்ட வருகிறாள் ‘மாயா’

ஜூன் 18ல் ரசிகர்களை மிரட்ட வருகிறாள் ‘மாயா’

செய்திகள் 17-Jun-2015 11:51 AM IST Top 10 கருத்துக்கள்

நயன்தாரா நாயகியாக நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் ‘மாயா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டைட்டில் டீஸர் கடந்த 12ஆம் தேதி வெளியானது. ஹாரர் படத்துக்கே உரிய திகில் இசையுடன் அற்புதமான லோகோ டிஸைனுடன் வெளிவந்த அந்த டீஸர் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. இருந்தாலும், நயன்தாராவை அந்த டீஸரில் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கம் ரசிகர்களுக்கு இருந்தது. இப்போது அந்தக்குறையைத் தீர்த்து வைக்க வருகிறது ‘மாயா’ டிரைலர்.

‘பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ்’ தயாரிப்பில் அஸ்வின் சரவணன் இயக்கியிருக்கும் ‘மாயா’ படத்தின் டிரைலர் நாளை மாலை 6 மணிக்கு யு டியூப்பில் ரிலீஸாகவிருக்கிறது. சத்யன் சூர்யன் ஒளிப்பதிவில், ரான் யோஹான் இசையமைப்பில், டி.எஸ்.சுரேஷ் எடிட்டிங்கில் உருவாகியிருக்கிறது இந்த ‘மாயா’. கிட்டத்தட்ட 2 நிமிடங்கள் ஓடும் இந்த டிரைலர், நிச்சயமாக ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தைத் தரும் என்கிறார்கள். அதோடு ‘பீட்சா’ படத்திற்குப் பிறகு ரசிகர்களை டெக்னிக்கலாக மிரட்டும் ஹாரர் படமாக ‘மாயா’ இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறது படக்குழு.

‘டால்பி அட்மாஸ்’ தொழில்நுட்பத்தில் உருவாகியிருக்கும் ‘மாயா’ சென்சாருக்காக தயாராகிக் கொண்டிருக்கிறது. தமிழகமெங்கும் ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் வெளியீடு செய்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - எழு வேலைக்காரா பாடல் வீடியோ


;