சினிமா தான் என் வாழ்க்கை! - லிங்குசாமி

சினிமா தான் என் வாழ்க்கை! - லிங்குசாமி

செய்திகள் 17-Jun-2015 11:09 AM IST VRC கருத்துக்கள்

லிங்குசாமியின் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம் தயாரித்திருக்கும் படம் ‘ரஜினி முருகன்’. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்திற்குப் பிறகு பொன்ராம் இயக்கியுள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்க, ராஜ்கிரண், சூரி, மனோபாலா, சமுத்திரகனி, ஞானசம்பந்தம் ஆகியோரும் நடித்துள்ளனர். டி.இமான் இசை அமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் நேற்று வெளியானது. இதனைத் தொடர்ந்து நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் லிங்குசாமி பேசும்போது,

‘‘திருப்பதி பிரதர்ஸ் கம்பெனிக்கு நிறைய பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கிறது என்று நிறைய பேர் பேசி வருகிறார்கள். சிவகார்த்திகேயன் பேசும்போது கூட அதுபற்றி குறிப்பிட்டார்! அது சம்பந்தமாக நான் இங்கு பேசியாக வேண்டும்’’ என்று பேசத் துவங்கிய லிங்குசாமி,
‘‘சினிமாவே நம்பிக்கையில்தான் இயங்குகிறது. ஊரிலிருந்து இங்கு நான் வந்தபோது என்ன கொண்டு வந்தேன்? நம்பிக்கையை மட்டும்தான் எடுத்துக்கொண்டு வந்தேன். வேறு என்ன அள்ளிக் கொண்டு வந்தேன்? உதவி இயக்குநராக சென்னையிலிருந்து நான் ஊருக்குப் போகும்போதெல்லாம் நான் மதிக்கும் உறவினரை வைத்து என்னிடம் சமரசம் பேசி மனதை மாற்றுவார்கள். சினிமாவில் லட்சம் பேர் வருகிறார்கள். ஆனால் அதில் ஒருவன் தான் ஜெயிக்கிறான்! உன்னால் ஜெயிக்க முடியுமா? என்று என்னிடம் கேட்பார்கள்! அப்போது நான் அவர்களிடம் சொல்வேன், அந்த ஒருவன் நான்தான் என்று! சின்ன வயதிலிருந்தே சினிமா சினிமா என்றிருந்தவன் நான்! சினிமா தான் என் வாழ்க்கை! அதில் பிடிவாதமாக இருக்கிறேன்!

இன்றைக்கு நாலு படங்கள் தயாரிக்கிற அளவுக்கு வளர்ந்திருக்கிறோம். சினிமாவில் நம்பிக்கை மட்டும் இருந்தால் போதும்! ஜெயித்து விடலாம்! எல்லோரது வாழ்க்கையிலும் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும்! இது என் வாழ்க்கையோட முதல் பாதி! மறுபாதி இந்த பட வெளியீட்டுக்கு பிறகுதான்! எனவே பிரச்சினை என்று சொல்லி வருவது பற்றி நான் கவலைப்படவில்லை. எனக்கு இருக்கிற சொத்துக்களை எல்லாம் விற்றாவது இந்த படத்தை குறித்த நேரத்தில் ரிலீஸ் செய்வேன்! தொடர்ந்து படங்களை எடுப்பேன்! இந்த படம் வெளியானதும் ‘சண்டக்கோழி-2’ படத்தின் படப்பிடிப்பை துவங்கவுள்ளேன்! அதிலும் ‘ரஜினி முருகன்’ படத்தில் பணியாற்றிய டி.இமான், ராஜ்கிரண் உட்பட பலர் பங்கேற்க உள்ளனர்’’ என்று லிங்குசாமி நெகிழ்ச்சியுடன் பேசினார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெஞ்சில் துணிவிருந்தால் மோஷன் போஸ்டர்


;