ரஜினி முருகன் - டீஸர் விமர்சனம்

ரஜினி முருகன் - டீஸர் விமர்சனம்

கட்டுரை 17-Jun-2015 11:07 AM IST Chandru கருத்துக்கள்

‘வருத்தப்படாத வாலிபர் சங்க’த்தின் அடுத்த வரவு இந்த ‘ரஜினி முருகன்’. ஹீரோவாக சிவகார்த்திகேயன், அவருடன் லூட்டியடிக்கும் காமெடியனாக சூரி. புதுமுகம் கீர்த்தி சுரேஷ் ஹீரோயின். பொன்ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் புதிதாக ராஜ்கிரணும் இணைந்திருக்கிறார். இமான் இசையமைக்க, ஒளிப்பதிவு செய்திருக்கிறார் பாலசுப்ரமணியெம். ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் வெளிவந்திருக்கிறது. எப்படி இருக்கிறார் ‘ரஜினி முருகன்’?

கலர்ஃபுல் ஒளிப்பதிவு, ஜிகு ஜிகு பின்னணி இசை, கலகல வசனங்கள் என ‘விவிஎஸ்’ கூட்டணியில் உருவான படம் என்பதற்கு உத்தரவாதம் தருகிறது இந்த டீஸர். அதிலும் ஆரம்பக்காட்சியில் முத்து ரஜினியாக சிவகார்த்திகேயன் வந்து நிற்கும் காட்சி.... செம மாஸ்! ரஹ்மானின் பின்னணி இசையையே பயன்படுத்தியிருப்பது கூடுதல் சிறப்பு. அனேகமாக இக்காட்சி கனவாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.

‘‘பார்க்கிறதுக்கு பெரிய எடத்துப் பசங்க மாதிரி தெரியுறீங்க..’’
‘‘பத்து நிமிஷம் பழகிப்பாருங்க... பஞ்சப்பரதேசி மாதிரி தெரியுவோம்!’’ & வருத்தப்படாத வாலிபர் சஙகத்தின் அதே நக்கல், நக்கயாண்டி இப்படத்திலும் உண்டு என்பதற்கு இந்த டயலாக் ஒன்றே போதும். மற்றபடி 1 நிமிடம் 14 வினாடிகள் ஓடும் இந்த டீஸரில் வேறெந்த காமெடியையும் பெரிதாக இடம்பெறச் செய்யவில்லை. டிரைலரில் பார்த்துக்கொள்ளலாம் என்ற ஏற்பாடாகக் கூட இருக்கலாம். ஹீரோயின் கீர்த்தி சுரேஷிற்கு ஒரு ‘ஷாட்’ கூட டீஸரில் கொடுக்காததை ரசிகர்கள் சார்பாக வன்மையாக கண்டிக்க கடமைப்பட்டிருக்கிறோம் (!)

டீஸரின் கடைசியில் ‘‘நம்பி வாங்க... சந்தோஷமாக போங்க’’ எனச் சொல்லியிருக்கிறார்கள் சிவாவும், சூரியும். ஆகவே... நம்புவோம் ரசிகர்களே!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெஞ்சில் துணிவிருந்தால் மோஷன் போஸ்டர்


;