யுவன் இடத்தைப் பிடித்த டி.இமான்!

யுவன் இடத்தைப் பிடித்த டி.இமான்!

செய்திகள் 17-Jun-2015 10:55 AM IST VRC கருத்துக்கள்

‘அஞ்சான்’ படத்தைத் தொடர்ந்து லிங்குசாமி இயக்கும் படம் ‘சண்டக்கோழி-2’. விஷால் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது. இந்த படத்திற்கு இசை அமைக்கும் பொறுப்பினை டி.இமானிடம் வழங்கியிருக்கிறார் லிங்குசாமி. இதனை நேற்று சென்னையில் நடந்த ‘ரஜினிமுருகன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார் லிங்குசாமி. இவர் இயக்கிய ‘பையா’, ‘சண்டக்கோழி’, ‘அஞ்சான்’ ஆகிய படங்களுக்கு இசை அமைத்தவர் யுவன் சங்கர் ராஜா தான்! ‘சண்டக்கோழி-2’ படத்தின் மூலம் முதன் முதலாக டி.இமானுடன் கூட்டணி சேருகிறார் லிங்குசாமி. ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம் தயாரித்து, சிவகார்த்திகேயன் நடித்து, பொன்ராம் இயக்கியுள்ள ‘ரஜினிமுருகன்’ படத்திற்கு டி.இமான் தான் இசை அமைப்பாளர் என்பதால், லிங்குசாமி தனது அடுத்த படத்திற்கு டி.இமானை இசை அமைப்பாளர் ஆக்கியிருக்கிறார். அத்துடன் ‘சண்டக்கோழி’ முதல் பாகத்தில் நடித்த ராஜ்கிரணும் ‘சண்டக்கோழி-2 படத்தில் நடிக்க இருக்கிறார் என்பதையும் லிங்குசாமி தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெஞ்சம் மறப்பதில்லை - டிரைலர் 2


;