எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியான கமல் பட நாயகி!

எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியான கமல் பட நாயகி!

செய்திகள் 17-Jun-2015 8:51 AM IST Chandru கருத்துக்கள்

பீட்சா, ஜிகர்தண்டா படங்களைத் தொடர்ந்து தற்போது ‘இறைவி’ படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். ஸ்டுடியோ கிரீன், திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. இப்படத்தில் முக்கிய வேடங்களில் விஜய்சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, கருணாகரன் ஆகியோர் நடிக்க, நாயகியாக அஞ்சலி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். தற்போது இப்படத்தில் நடிகை கமாலினி முகர்ஜியும் இணைந்திருக்கிறார்.

‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்த கமாலினி முகர்ஜி, அதன்பிறகு ‘காதல்னா சும்மா இல்லை’ என்ற தமிழ் படத்தில் மட்டும் நடித்ததோடு சரி, வேறெந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை. கிட்டத்தட்ட 6 வருடங்களுக்குப் பிறகு தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் கமாலினி. கடந்த சில நாட்களாக ‘இறைவி’ படப்படிப்பில் கமாலினி கலந்துகொண்டிருப்பதாகவும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - டீசர்


;