அஞ்சலிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

அஞ்சலிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

செய்திகள் 16-Jun-2015 12:31 PM IST Top 10 கருத்துக்கள்

அஞ்சலி என்றதும் நம் நினைவுக்கு முதலில் வருவது ‘அங்காடித் தெரு’ படத்தில் அவர் ஏற்று நடித்திருந்த ‘கனி’ வேடம் தான்! இந்த படத்தை தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்திருக்கிறார் என்றாலும் கனி கேரக்டரை மிஞ்சும் வகையிலான ஒரு கதாபாத்திரம் வேறு எந்த படத்திலும் அவருக்கு அமையவில்லை! பெரும்பாலும் கிளாமருக்காகவே பயன்பட்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்! ஆனால் அஞ்சலி தற்போது ‘ஜெயம்’ ரவியுடன் நடித்து வரும் ‘அப்பா டக்கர்’ படத்தில் பெயர் சொல்லும் படியான கேரக்டர் அமைந்திருக்கிறதாம் அஞ்சலிக்கு! இது தவிர ‘மாப்ள சிங்கம்’, ‘இறைவி’ ஆகிய படங்களிலும் நடித்து வரும் அஞ்சலிக்கு இன்று பிறந்த நாள்! ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது பல தமிழ் படங்களில் பிசியாக நடித்து வரும் அஞ்சலிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்வதில் ‘டாப்10 சினிமா’ பெருமிதம் அடைகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

டிக் டிக் டிக் - குறும்பா ஆடியோ பாடல்


;