விஜய்யின் ‘புலி’ அதிகாரபூர்வ அறிவிப்பு!

விஜய்யின் ‘புலி’ அதிகாரபூர்வ அறிவிப்பு!

செய்திகள் 16-Jun-2015 11:15 AM IST VRC கருத்துக்கள்

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘புலி’ படத்தின் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வரும் இப்படத்தின் டீஸர் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கெனவே நமது இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். இப்போது அதனை அதிகாரபூர்வமாக ‘புலி’ படத்தின் இயக்குனர் சிம்புதேவனே நேற்று ஒரு வீடியோ பதிவு மூலம் அறிவித்துள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். பெரும் பொருட் செலவில் தயாராகி வரும் ‘புலி’ படத்தில் விஜய்யுடன் ஹன்சிகா மோத்வானி, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி, சுதீப் மற்றும் பலர் நடிக்க, நட்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்து வருகிறார். ‘எஸ்.கே.டி.ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் இப்படத்தை பி.டி.செல்வகுமார் மற்றும் ஷிபு தமீன் இணைந்து தயாரிக்கிறார்கள். இவர்கள், ‘புலி’ படத்தை வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள் என்று கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;