‘காக்கா முட்டை’ சிறுவர்களை கௌரவித்த ‘ஜிகினா’ படக்குழு!

‘காக்கா முட்டை’ சிறுவர்களை கௌரவித்த ‘ஜிகினா’ படக்குழு!

செய்திகள் 16-Jun-2015 10:38 AM IST VRC கருத்துக்கள்

ரவி நந்தா பெரியசாமி இயக்கியுள்ள படம் ‘ஜிகினா’. விஜய் வசந்த் மற்றும் சிறுவர்கள் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜான் பீட்டர் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. சாதாரணமாக ஒரு படத்தின் இசை வெளியீட்டின்போது பெரிய நட்சத்திரங்கள் அல்லது வி.ஐ.பி.க்கள் முன்னிலையில் இசை வெளியிடுவது வழக்கம். ஆனால் ‘ஜிகினா’ படத்தின் இசையை சூர்யன் எஃப்.எம்மில் வித்தியாசமான முறையில் வெளியிட்டிருக்கிறார்கள்! அதாவது ‘ஜிகினா’ படத்தின் இசையை வெளியிட்ட வி.ஐ.பி.க்கள் யார் என்றால் ‘காக்கா முட்டை’ படத்தில் நடித்த சிறுவர்கள் விக்னேஷ், ரமேஷ்! சமீபத்தில் வெளியாகி சிறந்த பாராட்டுக்களுடன் நல்ல வசூலையும் அள்ளியுள்ள ‘காக்கா முட்டை’ படத்தின் மூலம் இந்த சிறுவர்கள் அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளதோடு பேசப்பட்டும் வருகிறார்கள்! இவர்களை கௌரவிக்கும் விதமாக லிங்குசாமி மற்றும் ‘ஜிகினா’ படக்குழுவினர் இந்த ஏற்பாடை செய்துள்ளார்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சென்னை 28 II காட்சிகள் - வீடியோ


;