ஹீரோவாகிறார் ராகவா லாரன்ஸின் சகோதரர்!

ஹீரோவாகிறார் ராகவா லாரன்ஸின் சகோதரர்!

செய்திகள் 16-Jun-2015 9:55 AM IST VRC கருத்துக்கள்

சமீபத்தில் திரைக்கு வந்து மாபெரும் வெற்றிபெற்ற ‘காஞ்சனா – 2’ படத்தில் இடம்பெற்ற, ‘சில்லாட்ட பில்லாட்ட…’ என்ற பாடலில் ராகவா லாரன்சுடன் நடனமாடி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த லாரன்ஸின் சகோதரர் எல்வின் கதாநாயகனாகிறார். இவரை வைத்து படம் இயக்க நிறைய இளம் இயக்குனர்கள் கதை சொல்லி வருகிறார்கள். அவர்களிடம் ராகவா லாரன்ஸே கதைகளை கேட்டு தனது சகோதரருக்கு பொருத்தமான கதையை தேர்வு செய்து வருகிறார். நடனம் மட்டும் இல்லாமல் சிக்ஸ்-பேக் உடற்கட்டுடன் நாயகனுக்கான அனைத்து பயிற்சிகளிலும் தனது சகோதரரை ஈடுபடுத்தி வருகிறார் லாரன்ஸ். இவர் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் தலைப்பு மற்றும் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்கிறார் ராகவா லாரன்ஸ்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாநகரம் - டிரைலர்


;