ஜூன் 17ல் வர்றார் ‘கான்’ சிம்பு!

ஜூன் 17ல் வர்றார் ‘கான்’ சிம்பு!

செய்திகள் 15-Jun-2015 8:23 PM IST Chandru கருத்துக்கள்

‘‘செல்வராகவன், சிம்பு படம் இந்த வேகத்திலா...?’’ என ஆச்சரியத்தில் இருக்கிறார்கள் அனைவரும். வழக்கமாக செல்வராகவன் படம் என்றாலே நிதானமாக துவங்கி, நீண்ட காலம் படப்பிடிப்பு நடந்து அதன் பிறகுதான் ஃபர்ஸ்ட் லுக், டீஸர், டிரைலர் எல்லாம் வெளிவரும். இதேபோல்தான் சிம்பு படங்களும். ஆனால், செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘கான்’ படத்தின் வேலைகள் ஆரம்பமாகி சில வாரங்களிலேயே பாதிக்கும்மேல் படப்பிடிப்பு முடிந்தவிட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இதோடு இன்னொரு சந்தோஷமான செய்தியையும் சிம்பு ரசிகர்களுக்காக வெளியிட்டிருக்கிறார் செல்வராகவன். ஆம்... ‘கான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் புதன்கிழமை (ஜூன் 17) அன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்போவதாக ட்வீட் செய்திருக்கிறார் செல்வா. அமீருடன் புதிய படம், ‘வாலு’ ரிலீஸுக்கு தயாராவது, இப்போது செல்வா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் என மீண்டும் பரபரப்பாகத் துவங்கிவிட்டார் சிம்பு.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;