‘ரோமியோ ஜூலியட்’ மிகப் பெரிய வெற்றி! – ‘ஜெயம்’ ரவி

‘ரோமியோ ஜூலியட்’ மிகப் பெரிய வெற்றி! – ‘ஜெயம்’ ரவி

செய்திகள் 15-Jun-2015 3:15 PM IST Top 10 கருத்துக்கள்

‘ஜெயம்’ ரவி, ஹன்சிகா நடித்து, லக்‌ஷ்மன் இயக்கியுள்ள ‘ரோமியோ ஜூலியட்’ படம் கடந்த வெள்ளிக் கிழமையன்று வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே மிகப் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ‘மெட்ராஸ் என்டர்பிரைசஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரித்துள்ள இப்படத்தை தமிழகம் முழுக்க ‘காஸ்மோ வில்லேஜ்’ சிவகுமார் வெளியிட்டுள்ளார். படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதால் படத் தயாரிப்பாளர் நந்தகோபால், இயக்குனர் லக்‌ஷ்மன், கதாநாயகன் ‘ஜெயம்’ ரவி, விநியோகஸ்தர் சிவகுமார் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்து தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.

அப்போது ‘ஜெயம்’ ரவி பேசும்போது, ‘‘நான் நடித்து சமீபத்தில் வெளிவந்த சில படங்கள் எனக்கு சொல்லும் படியான வெற்றியை தரவில்லை. அதனால் மனதளவில் கொஞ்சம் சோர்ந்து போயிருந்த எனக்கு ‘ரோமியோ ஜூலியட்’ படத்தின் வெற்றி பெரும் உற்சாகத்தை தந்துள்ளது. இந்த வெற்றிக்கு காரணமான ரசிகர்கள், இந்த படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் உட்பட அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். சென்ற வருடம் முழுக்க கடுமையாக உழைத்தேன். அந்த உழைப்புக்கு இந்த வருடம் வெற்றி கிடைத்துள்ளது. ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை தொடர்ந்து ‘பூலோகம்’, ‘தனி ஒருவன், ‘அப்பா டக்கர்’ என வரிசையாக நான் நடித்த படங்கள் ரிலீசாக இருக்கிறது. இந்தப் படங்களும் வெற்றிப் படங்களாக அமையும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதற்கு எல்லோரும் ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்’’ என்றார்

‘ரோமியோ ஜூலியட்’ படத்தை தமிழகம் முழுக்க வெளியிட்டுள்ள ‘காஸ்மோ வில்லேஜ்’ அதிபர் சிவகுமார் பேசும்போது, ‘‘சிபிராஜ் நடித்த ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தை தமிழகம் முழுக்க முதன் முதலாக வாங்கி வெளியிட்டேன். அதனை தொடர்ந்து இப்போது ‘ரோமியோ ஜூலியட்’ படத்தை வெளியிட்டுள்ளேன். ‘நாய்கள் ஜாக்கிரதை’ படம் நல்ல வசூலை தந்து வெற்றிப் படமாக அமைந்தது. அதைப் போல ‘ஜெயம்’ ரவி, ஹன்சிகா இணைந்து நடித்து, லக்‌ஷ்மன் இயக்கியுள்ள ‘ரோமியோ ஜூலியட்’ படத்திற்கும் ரசிகர்கள் அமோக வரவேற்பு தந்துள்ளது. இப்படம் நாங்கள் எதிர்பார்த்ததை விட நல்ல வசூல் செய்து வருகிறது. கண்டிப்பாக இந்தப் படம் இந்த வருடத்தின் ஹிட் படங்களில் இடம் பிடிக்கும்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் - trailer


;