டபுள் சந்தோஷத்தில் அருள்நிதி!

டபுள் சந்தோஷத்தில் அருள்நிதி!

செய்திகள் 15-Jun-2015 11:46 AM IST VRC கருத்துக்கள்

இந்த வருடம் ஹிட் அடித்த பேய் பட வரிசையில் அருள்நிதி நடித்த ‘டிமான்டி காலனி’ படமும் இடம் பெற்றுள்ளது. அஜய் ஞானமுத்து எழுதி, இயக்கிய இப்படத்தை, ‘காஞ்சனா-2’ படத்தை தமிழகம் முழுக்க வெளியிட்டு வசூலை அள்ளிய ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தான் வெளியிட்டுள்ளது. ‘டிமான்டி காலனி’ படமும் வெளியான நாளிலிருந்து ரசிகர்களின் பேராதரவு பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்க, இன்று 25-ஆவது நாளை தொட்டுள்ளது. சமீபத்தில் இல்லற வாழ்க்கையிலும் அடியெடுத்து வைத்துள்ள அருள்நிதிக்கு ‘டிமான்டி காலனி’யின் வெற்றி இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கும்! இந்த படத்தை விரைவில் அருள் நிதி நடித்துள்ள ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’ வெளியாக இருக்கிறது. இந்தப் படமும் வெற்றிப் படமாக அமைய நமது வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - டீசர்


;