‘கொம்பன்’ 75 நாட் அவுட்!

‘கொம்பன்’ 75 நாட் அவுட்!

செய்திகள் 15-Jun-2015 11:13 AM IST VRC கருத்துக்கள்

‘பிரியாணி’, ‘மெட்ராஸ்’ படங்களை தொடர்ந்து கார்த்தி நடித்த ‘கொம்பன்’ படமும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றிப் படமாக அமைந்துள்ளது. முத்தையா இயக்கத்தில், ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்த இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்திருக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்திருந்தார். முத்தையாவின் சிறந்த இயக்கம், கார்த்தி, லட்சுமி மேனன், ராஜ்கிரண் முதாலானோரின் சிறந்த நடிப்பு, ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசை ஆகியவை இப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு உறுதுணை புரிந்த அம்சங்கள்! சென்டிமென்ட் கலந்த குடும்ப கதைகளுக்கு ரசிகர்களிடம் எப்போதும் வரவேற்பு கிடைக்கும் என்பதற்கு ‘கொம்பன்’ படமும் ஒரு உதாரணம்! சென்ற ஏப்ரல் 1-ஆம் தேதி வெளியான ‘கொம்பன்’ படம் தற்போது 75 நாட்களை கடந்து இன்னமும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால் ‘கொம்பன்’ படக் குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனக்கு பட்டங்கள் பிடிக்காது - ரகுல் ப்ரீத்


;