நடிகர் சங்க செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறார் விஷால்!

நடிகர் சங்க செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறார் விஷால்!

செய்திகள் 15-Jun-2015 10:30 AM IST VRC கருத்துக்கள்

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு வரும் ஜூலை மாதம் 15-ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக சரத்குமாரும், செயலாளராக ராதாரவியும் பதவி வகித்து வருகிறார்கள். வருகிற தேர்தலில் தலைவர் பதவிக்கு மீண்டும் சரத்குமார் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து நடிகர் நாசர் போட்டியிடப் போகிறார் என்று கூறப்படுகிறது. செயலாளர் பதவிக்கு நடிகர் விஷால் போட்டியிடப் போவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஜூலை 15-ஆம் தேதி வேலை நாள் என்றும் அன்று தேர்தலை வைத்தால் வெளியூர் படப்பிடிப்புகளில் இருப்பவர்கள் வாக்களிக்க சென்னைக்கு வர சிரமம் ஏற்படும் என்பதால் விடுமுறை தினமான ஞாயிற்றுக் கிழமைக்கு தேர்தலை மாற்ற வேண்டும் என்று விஷால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர் முன்னிலையில் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அதில் விஷால் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;