‘லிங்கா’ கூட்டணியுடன் இணையும் சுதீப், ஷாம்லி?

‘லிங்கா’ கூட்டணியுடன் இணையும் சுதீப், ஷாம்லி?

செய்திகள் 15-Jun-2015 9:10 AM IST Chandru கருத்துக்கள்

‘லிங்கா’ படத்திற்குப் பிறகு மீடியா வெளிச்சத்திலிருந்து ஒதுங்கியிருந்த இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் தற்போது மீண்டும் தன் பட வேலைகளைத் துவங்கியிருக்கிறார். ‘லிங்கா’ படத்திற்கு முன்பு ஆரம்பிப்பதாக இருந்த சுதீப் படத்தைத்தான் தற்போது மீண்டும் கையிலெடுத்திருக்கிறார் கே.எஸ்.ஆர்.

தமிழ், கன்னடம் என ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளிலும் உருவாகும் இந்த த்ரில்லர் படத்தில் சுதீப்புக்கு ஜோடியாக நடிக்க ஷாலினியின் தங்கை ஷாம்லியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ‘லிங்கா’ படத்தைத் தயாரித்த ராக்லைன் வெங்கடேஷ் இப்படத்தையும் தயாரிக்கிறார். விரைவில் படப்பிடிப்புத் துவங்கவிருக்கும் பெயரிடப்படாத இப்படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

றெக்க - டிரைலர்


;