300KM சைக்கிள் ரேஸில் வென்று சாதித்த ஆர்யா!

300KM சைக்கிள் ரேஸில் வென்று சாதித்த ஆர்யா!

செய்திகள் 14-Jun-2015 10:09 AM IST Top 10 கருத்துக்கள்

ஆர்யாவின் சைக்கிள் ரேஸ் ஆசை வெற்றிகரமாக நடந்துவிட்டது. ஆம்... கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆர்யா சைக்கிள் பந்தயம் ஒன்றில் கலந்து கொள்ளவிருக்கிறார் என செய்தி வெளியிட்டிருந்தோம். அந்தப் பந்தயத்தில் கலந்துகொண்டு ஜெயித்திருக்கிறார் நடிகர் ஆர்யா.

ஸ்வீடன் நாட்டில் உள்ள மோட்டாலா என்ற ஊரில் கடந்த 50 வருடங்களாக வாடேர்னருடன் ரேஸ் என்ற சைக்கிள் பந்தயம் நடைபெற்று வருகிறது. இந்த பந்தயத்தில் அபாயகரமான வளைவுகள், ஏரிகள், குளங்கள், மலைகள், சீரற்ற எதிர்காற்று என பல்வேறு சவால்களை கடந்து 300 கிலோமீட்டர் பந்தய தூரத்தை 15 மணி நேரத்திற்குள் முடித்தாகவேண்டும். இந்தப் பந்தயத்தில் கலந்துகொண்ட ஆர்யா, வெற்றிகரமாக 300 கி.மீ. தூரத்தைக் கடந்து பரிசை வென்றிருக்கிறார். இதற்காக கடந்த 8 மாதங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ட்விட்டரில் நடிகர் ஆர்யா, ‘‘வாடேர்னருடன் ரேஸில் பதக்கத்தை வென்றுவிட்டேன். என் கனவை நனவாக்கிய முருகப்பா குரூப்ஸ் டிஐ சைக்கிள் அருண் அழகப்பனுக்கு கோடி நன்றிகள். நான் ஜெயிக்க வேண்டும் என மனதார நினைத்த அத்தனை உள்ளங்களுக்கும் நன்றிகள்!’’ என ட்வீட் செய்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பறந்து செல்ல வா - டிரைலர்


;