சிம்பு, அனிருத்தை இணைக்கும் இயக்குனர் அமீர்?

சிம்பு, அனிருத்தை இணைக்கும் இயக்குனர் அமீர்?

செய்திகள் 14-Jun-2015 9:30 AM IST Chandru கருத்துக்கள்

கௌதம் மேனன் இயக்கத்தில் ‘அச்சம் என்பது மடைமையடா’, செல்வராகவன் இயக்கத்தில் ‘கான்’ என ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார் சிம்பு. இந்த 2 படங்களுக்காகவும் கடந்த ஒன்றரை மாதங்களாக ஓய்வே இல்லாமல் படப்பிடிப்பில் கலந்துகொண்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திருக்கிறார் எஸ்டிஆர். அதோடு தற்போது தன் அடுத்த படம் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார்.

‘‘கான் படத்திற்குப் பிறகு அமீர் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க இருக்கிறேன் என்பதை சந்தோஷமாக அறிவிக்கிறேன். டெக்னீஷியன்கள் மற்ற நட்சத்திரங்கள் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. ஆக்ஷனும், காமெடியும் கலந்த படம். பக்கா மாஸ். பரவசமாக இருக்கிறது!’’ என ட்வீட் செய்திருக்கிறார் சிம்பு.

நாம் கேள்விப்பட்டவரை இப்படத்திற்கு இசையமைக்க அனிருத்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்கிறார்கள். சிம்புவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான அனிருத் இதுவரை சிம்பு படத்திற்கு இசையமைத்ததில்லை. இதனால் சிம்புவையும், அனிருத்தையும் அமீர் இணைத்து வைப்பார் என ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

(சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் வாலு, இது நம்ம ஆளு படங்களின் ரிலீஸ் வேலைகளும் இன்னொருபுறம் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன)

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;