டைம் மெஷினை வைத்து வித்தை காட்டும் படம்!

டைம் மெஷினை வைத்து வித்தை காட்டும் படம்!

செய்திகள் 13-Jun-2015 12:57 PM IST VRC கருத்துக்கள்

‘‘டைம் மெஷின் இருந்தால் காந்தி தாத்தாவை மட்டும் இல்ல, நம்ம தாத்தாவோட கல்யாணத்தையே நேர்ல பார்க்கலாம்’’ என்ற பொருளுடன் வித்தியாசமான கதை அமைப்புடன் உருவாகியிருக்கும் படம் ‘இன்று நேற்று நாளை’. ‘சூதுகவ்வும் நலன் குமாரசாமியின் அசிஸ்டென்ட் ரவிக்குமார் இயக்கியிருக்கும் இப்படத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்திருக்க, மியா ஜார்ஜ் கதாநாயகியாக நடித்துள்ளார். சி.வி.குமாரின் ‘திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனமும், கே.ஈ.ஞானவேல் ராஜாவின் ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு வெளியீடு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்த படத்தில் டைம் மெஷின் முக்கிய அங்கம் வகிக்கிறது. இதை வைத்து ஃபாண்டஸி டைம் டிராவல் கதையாக சித்தரிக்கப்பட்டுள்ள இப்படத்தின் டிரைலரே மிரட்டும் வகையில் அமைந்திருந்தது. 1945 காலகட்டம், தற்போதைய காலகட்டம், வருகிற 2065 காலகட்டம் என மூன்று காலகட்டங்களில் நடப்பது மாதிரி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. 1945 காலகட்டத்தில் நடக்கும் காட்சிகளில் மகாத்மா காந்தியும் ஒருவர்! இந்த கேரக்டரில் ‘காந்தி’ கனகராஜ் என்பவர் மிக பொருத்தமாக நடித்துள்ளார். விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், காந்தி கனகாராஜ் ஆகியோருடன் கருணாகரன், ரவி சங்கர், டி.எம்.கார்த்திக், ஜெயபிரகாஷ் முதலானோரும் நடிக்க ஆர்யா ஒரு சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்திற்கு ஹிப் பாப் தமிழா ஆதி இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவை ஏ.வசந்த் கவனித்திருக்கிறார். படத்தொகுப்பை லியோ ஜான் பால் கவனித்துள்ளார். வித்தியாசமான படங்களை தயாரித்து வெளியிடும் ‘திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்’ மற்றும் ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனங்களின் இந்த வித்தியாசமான படைப்பு விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கதாநாயகன் - உன் நெனப்பு பாடல் வீடியோ


;