சிவகார்த்திகேயனுக்கு மற்றுமொரு வெற்றி!

சிவகார்த்திகேயனுக்கு மற்றுமொரு வெற்றி!

செய்திகள் 13-Jun-2015 11:52 AM IST VRC கருத்துக்கள்

கன்னட நடிகர் சிவராஜ்குமாருடன், சிவகார்த்திகேயன் கேமியோ கேரக்டரில் நடித்துள்ள கன்னட படம் ‘வஜ்ரகயா’. இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளதைப்போல் மலையாள நடிகர் திலீப், தெலுங்கு நடிகர் ரவி தேஜா, கன்னட நடிகர் ரவிச்சந்திரன் ஆகியோரும் கேமியோ ரோல்களில் நடித்திருக்கிறார்கள்! இதனால் இப்படம் மீது கன்னட சினிமா ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது. இந்நிலையில் இப்படம் நேற்று (12-6-15) வெளியானது.

இப்படத்திற்கு ரசிகர்களிடையே எதிர்பார்த்ததை விட பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு நல்ல விமர்சனங்களும் வந்து கொண்டிருப்பதோடு முதல் நாளே நல்ல வசூலையும் தந்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இப்படம் சூப்பர் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இப்படத்தில் நடித்துள்ள சிவகார்த்திகேயன் உட்பட அனைவரும் பெரும் மகிழ்ச்சிக்குள்ளாகியிருக்கிறார்கள். சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் முதல் கன்னட படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நிமிர் - டிரைலர்


;