‘காக்க காக்க' படத்தை தொடர்ந்து தாக்க தாக்க!

‘காக்க காக்க' படத்தை தொடர்ந்து தாக்க தாக்க!

செய்திகள் 13-Jun-2015 11:21 AM IST VRC கருத்துக்கள்

விக்ராந்த் ஹீரோவாக நடிக்க, அவரது அண்ணன் சஞ்சய் இயக்கியுள்ள படம் ‘தாக்க தாக்க’. ‘ஸ்டுடியோ வேர்ஸ்டைல் புரொடக்‌ஷன்’ நிறுவனமும் ‘யுனிகான் ஃப்ரேம்ஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை ‘கலைப்புலி; எஸ்.தாணு வெளியிடுகிறார். விரைவில் ரிலீசாகவிருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குனர் செல்வராகவன் இசையை வெளியிட, ‘தாக்க தாக்க’ படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர். இதனை தொடர்ந்து ‘கலைப்புலி’ எஸ்.தாணு ‘தாக்க தாக்க’ படம் குறித்து பேசும்போது,

‘‘நேரமே இல்லாத சூழ்நிலையில் தான் இப்படத்தை பார்த்தேன். இந்த படத்தை ஒரு கமர்ஷியல் கவிதையாக எடுத்திருக்கிறார்கள். இப்படத்தை இயக்கியிருக்கும் சஞ்சய்யின் திறமை இப்படத்தில் தெரிகிறது. எதிர்காலத்தில் அவரை இயக்க வைத்து நான் படம் தயாரிப்பேன். அதைப் போலவே இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் விக்ராந்திடம் வைரம் பாயந்த திறமை இருக்கிறது. அது அவரது முகத்தில் தெரிகிறது. இப்படத்தில் விக்ராந்த் கேட்டுக் கொண்டதற்காக அவரது நண்பர்கள் ஆர்யா, விஷால், விஷ்ணு ஆகியோர் நடித்து உதவியிருப்பது நல்ல நட்புக்கு உதாரணமாக திகழ்வதொடு, மற்றவர்களுக்கு அது நல்ல எடுத்துக் காட்டாகவும் அமைந்துள்ளது. இது எதிர்கால சினிமாவை செழிக்க வகை செய்யும்’’ என்றார்.

இதனை தொடர்ந்து பேசிய இயக்குனர் செல்வராகவன், ‘‘தாணு சார் வாங்கிய படம் என்றால் அப்படம் நிச்சயமாக வெற்றிப் படமாக அமையும். அவரது ‘காக்க காக்க’ படத்தை விட இந்த ‘தாக்க தாக்க’ படம் மாபெரும் வெற்றிபெறும்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெஞ்சில் துணிவிருந்தால் - டீசர்


;