வீரம் சிவாவை தொடர்ந்து அஜித்தின் அடுத்த இயக்குனர்?

வீரம் சிவாவை தொடர்ந்து அஜித்தின் அடுத்த இயக்குனர்?

செய்திகள் 12-Jun-2015 12:23 PM IST Top 10 கருத்துக்கள்

‘வீரம்’ சிவா இயக்கத்தில் தற்போது அஜித் நடித்து வரும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தை தீபாவளி ரிலீஸாக கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தை தொடர்ந்து ‘நிக் ஆர்ட்ஸ்’ சக்ரவர்த்திக்காக ஒரு படத்தை நடித்து கொடுக்க அஜித் முடிவு செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. ‘நிக் ஆர்ட்ஸ்’ சக்ரவர்த்தி அஜித்தின் ஆரம்ப கால நெருங்கிய நண்பர்! சமீபகாலத்தில் சக்ரவர்த்தி தயாரித்த சில படங்கள் வியாபார ரீதியாக வெற்றிபெறவில்லை. அத்துடன் சிம்பு நடிப்பில் சக்ரவர்த்தி தயாரித்துள்ள ‘வாலு’ திரைப்படமும் ரிலீசாகாமல் முடங்கி கிடக்கிறது. இதனால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள சக்ரவர்த்திக்கு உதவும் நோக்கத்தோடு அஜித் படம் நடித்து கொடுக்க முடிவு செய்துள்ளார். இந்நிலையில், அஜித் சுசீந்திரன் இயக்கத்தில், வேந்தர் மூவிஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவும் முடிவு செய்துள்ளார் என்று நமக்கு நெருங்கிய வட்டாரத்திலிருந்து தகவல் கிடைத்துள்ளது. ஆனால் ‘வீரம்’ சிவா இயக்கும் படம் முடிந்ததும் அஜித் ‘நிக் ஆர்ட்ஸ்’ சக்ரவர்த்தி தயாரிப்பில் நடிப்பாரா? இல்லை சுசீந்திரன் இயக்கத்தில் நடிப்பாரா என்பது தெரியவில்லை. இது சம்பந்தமான் உறுதியான தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;