விஜய், அட்லி படத்தின் புதிய தகவல்கள்

விஜய், அட்லி படத்தின் புதிய தகவல்கள்

செய்திகள் 12-Jun-2015 11:00 AM IST VRC கருத்துக்கள்

விஜய் நடிக்கும் ‘புலி’ படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து விட்டு, தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் மற்றும் கிராஃபிக்ஸ் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதனால் விஜய், அடுத்து அட்லி இயக்கும் படத்திற்காக தயாராகி வருகிறார். விஜய், அட்லி முதன் முதலாக இணையும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் 1-ஆம் தேதி துவங்கவிருக்கிறதாம்! இது ஜி.வி.பிராகஷ் குமார் இசை அமைக்கும் 50-ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஜி.வி.பிரகாஷ், அட்லி முதன் முதலாக இணைந்து பணியாற்றிய ‘ராஜா ராணி’ படப் பாடல்கள் பெரிதும் பேசப்பட்டன. அதைப் போலவே இப்படத்தின் பாடல்களையும் சிறப்பாக தரவேண்டும் என்று ஜி.வி.பிரகாஷ் கடுமையாக உழைத்து வருகிறார் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே இப்படத்திற்காக இரண்டு பாடல்களை தயார் செய்த ஜி.வி.பிராகஷ், தற்போது மீதி பாடல்களின் வேலைகளில் படு பிசியாக இயங்கி வருகிறாராம்! இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக் சமந்தா, எமி ஜாக்சன் நடிக்கிறார்கள். மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சென்னை 28 II காட்சிகள் - வீடியோ


;