ஆரம்பம், என்னை அறிந்தாலைத் தொடர்ந்து தல 56!

ஆரம்பம், என்னை அறிந்தாலைத் தொடர்ந்து தல 56!

செய்திகள் 12-Jun-2015 10:53 AM IST VRC கருத்துக்கள்

அஜித்தின் ‘பில்லா-2’, ‘ஆரம்பம்’, ‘என்னை அறிந்தால்’ ஆகிய படங்களின் ஆடியோ உரிமையை வாங்கிய சோனி நிறுவனம், தற்போது வீரம் சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் பெயரிடப்படாத படத்தின் ஆடியோ உரிமையையும் கைபற்றியுள்ளது. ‘பில்லா-2’, ‘ஆரம்பம்’ ஆகிய படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். ‘என்னை அறிந்தால்’ படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருந்தார். தற்போது அஜித் நடித்து வரும் படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். வரிசையாக பல ஹிட் பாடல்களை தந்துள்ள அனிருத்தும், அஜித்தும் முதன் முதலாக இணையும் படம் இது என்பதால் இப்படம் மீது பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது. தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனை நோக்கி பாயும் தோட்டா - விசிறி ஆடியோ பாடல்


;