உதயநிதி ஸ்டாலினின் முதல் ரீ-மேக் படம்!

உதயநிதி ஸ்டாலினின் முதல் ரீ-மேக் படம்!

செய்திகள் 11-Jun-2015 2:03 PM IST VRC கருத்துக்கள்

‘நண்பேன்டா’ படத்தை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து, நடிக்கும் படம் ‘கெத்து’. ‘மான் கராத்தே’ படப் புகழ் திருக்குமரன் இயக்கி வரும் இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடித்து வருகிறார். இந்தப் படம் முடிந்ததும் ஹிந்தியில் அர்ஷத் வர்சி, பொம்மன் இரானி நடித்து, சுபாஷ் கபூர் இயக்கிய ‘Jolly LLB ’ படத்தை தமிழில் ரீ-மேக் செய்து, நடிக்க திட்டமிட்டுள்ளார்! ‘என்றென்றும் புன்னகை’ படத்தை இயக்கிய அஹமத் இயக்கத்தில் உதயநிதி ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் என்று சில நாட்களுக்கு முன் தகவல்கள் வெளியாகியிருந்தது. அதனால் ‘Jolly LLB’ படத்தின் தமிழ் ரீ-மேக்கை இயக்கும் பொறுப்பை அஹமதிடம் கொடுப்பார் உதயநிதி ஸ்டாலின் என்று கூறப்படுகிறது. இந்த படம் சம்பந்தமான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சரவணன் இருக்க பயமேன் - எம்புட்டு இருக்குது ஆசை வீடியோ சாங்


;