ரசிகர்களின் ‘ஜூலியட்’டாக மாறிய நடிகை ஹன்சிகா!

ரசிகர்களின் ‘ஜூலியட்’டாக மாறிய நடிகை ஹன்சிகா!

செய்திகள் 11-Jun-2015 1:03 PM IST Chandru கருத்துக்கள்

‘அரண்மனை’ படத்தைத் தொடர்ந்து ஹன்சிகாவின் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘ரோமியோ ஜூலியட்’ திரைப்படம் நாளை உலகமெங்கும் வெளியாகிறது. லக்ஷ்மண் இயக்கியிருக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கிறார். இந்த வருடம் தனது நடிப்பில் வெளிவரும் முதல் படம் இதுதான் என்பதால், அதுகுறித்து பத்திரிகையாளர் செய்தி ஒன்றை அனுப்பியிருக்கிறார் ஹன்சிகா. அதன் விவரம்..

“2015ன் இரண்டாம் பகுதி ‘ரோமியோ ஜூலியட்’, ‘புலி’ படங்களின் வருகையால் எனக்கு மிக பெரியதாய் அமைய போகிறது. ‘ரோமியோ ஜூலியட்’ திரைப்படத்தில் ஒரு விமான பணிப்பெண் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளேன். படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்துள்ள வரவேற்பு மிகவும் மகிழ்ச்சியாய் உள்ளது. நான் செல்லும் இடமெங்கும் என்னை ‘ஜூலியட்’ என்றழைகிறார்கள். ஒரு படத்தின் கதாப்பாத்திரத்தின் பெயரால் அழைக்கப்படுவது எந்த ஒரு நடிகைக்கும் பெருமையான விஷயம். ரோமியோ ஜூலியட் திரைப்படம் எனக்கு அந்தப் பெருமையைத் தந்துள்ளது என்பதில் மிக்க மகிழ்ச்சி.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இப்படை வெல்லும் - குலேபா வா பாடல் வீடியோ


;