அப்பா தயாரிப்பு, அண்ணன் இயக்குனர், தம்பி ஹீரோ!

அப்பா தயாரிப்பு, அண்ணன் இயக்குனர், தம்பி ஹீரோ!

செய்திகள் 11-Jun-2015 11:45 AM IST VRC கருத்துக்கள்

‘மிருகம்’, ‘ஈரம்’, ‘அரவான்’ ஆகிய குறிப்பிடும்படியான படங்களில் நடித்த ஆதியின் நடிப்பில் விரைவில் ரிலீசாகவிருக்கும் படம் ‘யாகாவாராயினும் நா காக்க’. திருவள்ளுவரின் ‘யாகாவாராயினும் நா காக்க’ என்ற சொல்லுக்கு அர்த்தம் ‘ஒருவர் எதை காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும்! இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காராணமாகிவிடும்’ என்பது தான்!

இந்த பொருளுடன் ஒரு சில வருடங்களுக்கு முன் சென்னையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை வைத்து தான் இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதாம்! அதாவது ஒரு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நடந்த ஒரு எதிர்பாராத சம்பவம் நான்கு நண்பர்களின் வாழ்க்கையை எப்படி புரட்டி போடுகிறது? அந்த நண்பர்கள் யார்? அவர்களுக்கும் மும்பையில் ரகசிய உலகின் கடவுள் என்று கூறப்படும் முதலியாருக்கும் என்ன சம்பந்தம் என்பதை விறுவிறுப்பான திரைக்கதையோடு சொல்லும் படமாம் இது.

இந்தப் படத்தை ‘ஆதர்ஷ சித்ராலயா’ நிறுவனம் சார்பில் தயாரித்திருப்பவ ஆதியின் தந்தை ரவிராஜா பின்னி ஷெட்டி! இவர் தெலுங்கின் முன்னணி ஹீரோக்களை நடிக்க வைத்து 60-க்கும் மேற்பட்ட பாங்களை இயக்கியவர்! ‘யாகாவாராயினும் நா காக்க’ படத்தை இயக்கியிருப்பவர் சத்ய பிரபாஸ். இவர் ரவிராஜா பின்னி ஷெட்டியின் மூத்த மகன், ஹீரோ ஆதியின் அண்ணன்! அமெரிக்காவிலுள்ள புகழ்பெற்ற ஒரு திரைப்பட கல்லூரியில் இயக்கம் குறித்த படிப்பை முடுத்துவிட்டு வந்து முதன் முதாலாக இயக்கியிருக்கும் படம் இது. அப்பா தாயாரிப்பில், அண்ணன் இயக்கத்தில் தம்பி ஆதி ஹீரோவாக நடித்திருக்கும் இப்படத்தில் ஆதிக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்திருக்கிறார். நிக்கி நடிக்க ஒப்புக்கொண்ட முதல் தமிழ் படம் இது என்பது குறிப்பிட்த்தக்கது.

ஆதி, நிக்கி கல்ராணியுடன் இப்படத்தில் ரிச்சா பலோட், நாசர், கிட்டி, பசுபதி, ஹரீஷ், ‘ஆடுகளம்’ நரேன், பிரகதி, மகாதேவன், லட்சுமி ப்ரியா, ஷ்யாம், சித்தார்த், ஸ்ரீகார்த்திக் ஆகியோரும் நடிக்க, மும்பை தாதா முதலியாராக பிரபல பாலிவுட் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி நடித்துள்ளார். 35 ஆண்டு சினிமா அனுபவத்தில் நிறைய தமிழ் படங்களில் நடிக்க அழைப்பு வந்தும் இதுவரை எந்த தமிழ் படத்திலும் நடிக்காமல் இருந்த மிதுன் சக்கரவர்த்தி, இப்படத்தின் கதை மீது இருக்கும் நம்பிக்கையில் தான் இதில் நடிக்க ஒப்புகொண்டாரம்.

அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்திற்கு பிரசன், பிரவீன், ஷ்யாம் ஆகிய மூன்று பேர் இணைந்து இசை அமைத்திருக்கிறார்கள். ஷண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தேசிய விருது பெற்ற எடிட்டர் சாபு ஜோசஃப் படத்தொகுப்பை கவனித்துள்ளார். இந்த படத்தை வருகிற 26-ஆம் தேதி உலகம் முழுக்க ‘குளோபல் யுனைடெட் மீடியா’ நிறுவனம் வெளியிடுகிறது. இந்த நிறுவனம் தான் விக்ரம், ஷங்கர் கூட்டணியில் அமைந்த ‘ஐ’ படத்தை கேரளா முழுக்க வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹர ஹர மஹாதேவகி - பாடல் வீடியோ


;