சல்மான்கானைத் தொடர்ந்து சூர்யாவும் ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

சல்மான்கானைத் தொடர்ந்து சூர்யாவும் ரசிகர்களுக்கு வேண்டுகோள்!

செய்திகள் 11-Jun-2015 11:19 AM IST Chandru கருத்துக்கள்

ஒவ்வொரு முன்னணி நடிகரின் படம் ரிலீஸாகும்போதும் சமூக வலைதளங்களில் அப்படம் குறித்த பாஸிடிவ் கருத்துக்களை சம்பந்தப்பட்ட நடிகரின் ரசிகர்களும், அவர்களுக்கெதிராக நெகட்டிவ் கருத்துக்களை மற்ற முன்னணி நடிகர்களின் ரசிகர்களும் பதிவிட்டு சண்டையிட்டுக் கொள்வது தமிழ்சினிமாவில் வாடிக்கையாகிவிட்டது. குறிப்பாக அஜித், விஜய் ரசிகர்களிடையேதான் இந்த கருத்து மோதல் அதிமாக உள்ளது. இது சம்பந்தமான டேக் ஒன்று சமீபத்தில், ட்விட்டரில் இந்திய அளவில் டிரென்ட் ஆக, வடஇந்திய ஊடகங்கள் இதனை கேலி செய்து செய்தியும் வெளியிட்டனர்.

வடஇந்தியாவிலும் இதுபோன்ற சண்டைகள் நடப்பது வாடிக்கைதான். இது சம்பந்தமாக தன்னுடைய ரசிகர்களிடம் நடிகர் சல்மான்கான், ‘தயவுசெய்து சமூக வலைதளங்களில் கெட்ட வார்த்தைகளை பதிவிட்டு சண்டையிட்டுக் கொள்ளாதீர்கள். அன்பையும், நேசத்தையும் பகிருங்கள்!’ என வேண்டுகோள் ஒன்றையும் விடுத்தார். இதனை சூர்யாவும் ரீட்வீட் செய்திருந்தார். இப்போது நடிகர் சூர்யாவும் இதேபோன்றதொரு வேண்டுகோளை ரசிகர்களுக்கு விடுத்திருக்கிறார்.

‘மாஸ்’ படம் வெளியானதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் விஜய், அஜித், சூர்யா ரசிகர்களிடையே கடந்த சில நாட்களாக கருத்து மோதல் நடந்து கொண்டிருக்கிறது. இதனையறிந்த சூர்யா, ரசிகர்களும், நலன் விரும்பிகளும் தயவுசெய்து மற்ற நடிகரின் ரசிகர்களுடன் சண்டையிடுவதை நிறுத்திக்கொள்ளும்படியும், தங்களது நேரத்தை அவர்களுக்காகவும், அவர்களின் குடும்பங்களுக்காகவும் செலவிடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;