விதார்த்துக்கு திருப்பதியில் திருமணம்!

விதார்த்துக்கு திருப்பதியில் திருமணம்!

செய்திகள் 11-Jun-2015 10:52 AM IST VRC கருத்துக்கள்

‘மைனா’, வீரம் காடு உட்பட பல படங்களில் நடித்தவர் விதார்த். இவருக்கும் பழனியை சேர்ந்த வழக்கறிஞர் சிவானந்தம் மகள் காயத்ரி தேவிக்கும் சமீபத்தில் பழனியில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இதனை தொடர்ந்து இவர்களது திருமணம் இன்று (11-6-15) காலை திருப்பதியில் எளிய முறையில் நடந்தது. இந்த திருமண நிகழ்ச்சியில் நடிகர் சங்க செயலாளரும், நடிகருமான ராதாரவி கலந்துகொண்டார். விதார்த், காயத்ரி தேவி திருமண வரவேற்பு நிகழ்ச்சி வருகிற 17-ஆம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு கிடாயின் கருணை மனு - டிரைலர்


;