நாளை முதல் குடிக்க மாட்டேன்!

நாளை முதல் குடிக்க மாட்டேன்!

செய்திகள் 11-Jun-2015 10:34 AM IST VRC கருத்துக்கள்

இயக்குனர் ஆர்.பாண்டியராஜின் ‘டபுள்ஸ்’ மற்றும் பல இயக்குகனர்களின் திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய கோ.செந்தில்ராஜா இயக்கும் படம் ‘நாளை முதல் குடிக்கமாட்டேன். மதுவிற்கு அடிமையான ஒருவன் தன் வாழ்க்கையில் எதையெல்லாம் இழக்கிறான், அதனால் அவனுக்கு ஏற்படும் பிரச்சனையில் இருந்தும், குடிப்பழக்கத்தில் இருந்தும் எப்படி மீண்டு வருகிறான் என்பதை நகைச்சுவையுடன் கூறும் படமே இது

இப்படத்தில் ராஜ், காந்தராஜ், சம்ர்த்தின், பனிமதி போன்ற புதுமுகங்கள் நடிக்க, முதல் கட்ட படப்பிடிப்பு இதுவரை படப்பிடிப்பு நடந்திராத கள்ளகுறிச்சி மற்றும் சின்ன சேலம் அருகே உள்ள வாசுதேவனூர், ராயப்பனூர், எலித்தூர் போன்ற யதார்த்தம் மாறாத கிராமப்புறங்களில் நடந்து முடிந்துள்ளது.

இப்படத்திற்கு புன்னகை’ வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். ஆர்.சிவசுப்புரமணியன் இசை அமைக்கிறார் சண்டைப்பயிற்சி மாஸ் மனோ, நடனத்தை ஜாய்மதி அமைக்கிறார். இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு பைத்தந்துறை, தென் செட்டியந்தல், நமச்சிவாயபுரம் ஆகிய கிராமப் பகுதிகளில் நடத்த நடைபெறவிருக்கிறது. இந்த படத்தை பனிமதி ஃபிலிம்ஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் எம்.ஜி.ராஜா தயாரிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மீன் குழம்பும் மண் பானையும் - டிரைலர்


;