‘காக்கா முட்டை’ ஒரு தேவதூதன்! - இயக்குனர் வசந்தபாலன்

‘காக்கா முட்டை’ ஒரு தேவதூதன்! - இயக்குனர் வசந்தபாலன்

செய்திகள் 11-Jun-2015 9:45 AM IST Chandru கருத்துக்கள்

வெயில், அங்காடித்தெரு, அரவான், காவியத்தலைவன் என தனது ஒவ்வொரு படத்திலும் புதுப்புது முயற்சிகளைக் கையாளும் இயக்குனர் வசந்தபாலன் ‘காக்கா முட்டை’ படம் குறித்த தனது கருத்துக்களை அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியிருக்கிறார். அதன் விபரம் இங்கே...

''காக்காமுட்டை படத்தின் வியாபார வெற்றி அளவில்லாத உற்சாகத்தை அளிக்கிறது. தொடர்ந்து தமிழ் சினிமாவின் நிலை வேறுவிதமாகவும் பயமுறுத்தும் வகையிலும் பிடிபடாத வகையிலும் இருந்தது. திகில் படங்கள் பயமுறுத்தும் பேய் படங்கள் பயமுறுத்தி சிரிப்பூட்டும் பேய் படங்கள் வெறும் சிரிப்பு படங்கள் திரில்லர் படங்கள் திடுக்கிடும் திருப்பங்களும் கொண்டைஊசி வளைவுகளும் நிரம்பிய சண்டை படங்கள் மட்டுமே ஓடிக்கொண்டிருந்த நிலையில் பார்வையாளர்கள் மொத்தபேருமே இதற்கு மாறிவிட்டார்களோ என்று தோன்றியது.

இளம் பார்வையாளர்கள் மொத்தபேரும் இந்த மனநிலையில் தான் திரைப்படங்களை ரசிக்கிறார்களோ என்ற ஐயம் உண்டாகியது. இது ஐபோன் யுகம் ஐபேடு யுகம் பேஸ்புக் டிவிட்டர் வாட்ஸ்அப் யுகம் ரசிகர்கள் மாறிவிட்டார்கள் என்று நிலவிய பேச்சை பொய்யாக்கியது காக்காமுட்டையின் வெற்றி. யதார்த்த வகை படங்களுக்கான காலம் முடிந்து விட்டதோ என்று எண்ணுகிற நிலையில் காக்காமுட்டை திரைப்படம் ஒரு தேவதூதன் என் போன்ற யதார்த்த வகை இயக்குனர்களுக்கு.'' என்று புகழ்ந்து தள்ளியிருக்கிறார் இயக்குனர் வசந்தபாலன்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காக்கா முட்டை - 'செல் செல்...' வீடியோ பாடல்


;