தனுஷ் படத்தில் ஹாலிவுட் சண்டைப் பயிற்சியாளர்!

தனுஷ் படத்தில் ஹாலிவுட் சண்டைப் பயிற்சியாளர்!

செய்திகள் 10-Jun-2015 4:58 PM IST Chandru கருத்துக்கள்

பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில், அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார் என்ற செய்தியை இரண்டு நாட்களுக்கு முன்பு நமது தளத்தில் வெளியிட்டிருந்தோம். தற்போது அந்த செய்தி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படம் குறித்து மேலும் சில புதிய தகவல்களும் அந்த அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகுந்த பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் தயாராகும் இந்த கமர்ஷியல் ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் ஹாலிவுட் சண்டைப்பயிற்சியாளர் ரோகர் யுயன் பணிபுரியவிருக்கிறார். இவர் எக்ஸ்&மென், பேட்மேன் பிகின்ஸ், ஜேம்ஸ்பாண்ட் படமான ‘ஸ்கைஃபால்’ உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களில் சண்டைப்பயிற்சியாளராகப் பணிபுரிந்தவர்.

மைனா, கும்கி, கயல் படங்களைத் தொடர்ந்து இப்படத்திற்கும் டி.இமானே இசையமைக்கிறார். ஒளிப்பதிவை வி.மகேந்திரன் கவனிக்க, படத்தொகுப்பு செய்கிறார் தாஸ் (டான் மேக்ஸ்).

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

டிக் டிக் டிக் - குறும்பா ஆடியோ பாடல்


;