ஜூன் 12-ல் வெளியாகும் சிவகார்த்திகேயனின் கன்னட படம்!

ஜூன் 12-ல் வெளியாகும் சிவகார்த்திகேயனின் கன்னட படம்!

செய்திகள் 10-Jun-2015 3:07 PM IST VRC கருத்துக்கள்

சிவராஜ்குமார் ஹீரோவாக நடிக்க, ஹர்ஷன் இயக்கியுள்ள கன்னட படம் ’வஜ்ர கயா’. இந்த படத்தில் ஹைலைட்டான விஷயம் தமிழ் நடிகர் சிவகார்த்திகேயன், மலையாள நடிகர் திலீப், தெலுங்கு நடிகர் ரவி தேஜா, கன்னட நடிகர் ரவிச்சந்திரன் ஆகியோர் கேமியோ ரோல்களில் நடித்திருப்பது! கன்னட படவுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவராஜ் குமாருடன் தென்னிந்திய சினிமாவின் இத்தனை ஹீரோக்கள் இணைந்து நடித்திருப்பதால், இப்படம் கன்னட சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ‘தன்வி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் மனோகர், கோபி இருவர் இணைந்து தயாரித்திருக்கும் இப்படம் நாளை மறுநாள் (12-6-15) ரிலீசாகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

முப்பரிமாணம் - டிரைலர்


;