நன்றி மறவாத விஜய், சூர்யா!

நன்றி மறவாத விஜய், சூர்யா!

செய்திகள் 10-Jun-2015 2:39 PM IST Top 10 கருத்துக்கள்

தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்திற்கு விரைவில் தேர்தல் நடக்கவிருக்கிறது. தற்போது இந்த சங்கத்தின் தலைவராக இருப்பவர் இயக்குனர் விக்ரமன். கடந்த தேர்தலில் வெற்றிபெற்று இவர் பதவி ஏற்றதிலிருந்து இந்த சங்க உறுப்பினர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு முயற்சிகள் எடுத்து, பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். அதில் ஒன்று இந்த சங்க வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹோம் தியேட்டர்! சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் பயன்படும் வகையில் இந்த ஹோம் தியேட்டரை அமைக்க நடிகர் விஜய் தானே முன் வந்து 15 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார். அத்துடன் இந்த சங்க அறக்கட்டளைக்காக 10 லட்சம் ரூபாயும் வழங்கியுள்ளார் விஜய். அதைப் போல ஹோம் தியேட்டருக்கான புரொஜெக்டர் செலவை இயக்குனர் ஏ.எல்.விஜய் ஏற்றுக்கொண்டு அதற்காக 5 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார். சென்ற ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று எண்ணிய இயக்குனர் விக்ரமன், அது சம்பந்தமாக நடிகர் சூர்யாவிடம் பேசியுள்ளார். அவரும் விக்ரமனின் நற்பணிகளை பாராட்டி சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் தீபாவளி பரிசு வழங்க பெரும் தொகையை வழங்கி, அத்தனை உறுப்பினர்களும் சந்தோஷமாக தீபாவளி கொண்டாட உதவியிருக்கிறார்.

இதனை விரைவில் வரவிருக்கிற சங்க தேர்தலையொட்டி நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நினைவு கூர்ந்த இயக்குனர் விக்ரமன், தன்னை மதித்து நன்றி மறவாம்ல் விஜய், சூர்யா, ஏ.எல்.விஜய் ஆகியோர் செய்த உதவிகளுக்கு நன்றி கூறினார். விக்ரமன் இயக்கத்தில் விஜய் நடித்த ‘பூவே உனக்காக’ படம் விஜய்க்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதைப்போல விக்ரமன் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘உன்னை நினைத்து’ படமும் சூர்யாவுக்கு நல்ல பெயரை பெற்று தந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;