சந்தானத்திற்கு கை கொடுத்த உதயநிதி ஸ்டாலின்!

சந்தானத்திற்கு கை கொடுத்த உதயநிதி ஸ்டாலின்!

செய்திகள் 10-Jun-2015 11:04 AM IST VRC கருத்துக்கள்

சந்தானம் ஹீரோவாக நடித்து, தயாரித்துள்ள படம் ‘இனிமே இப்படித்தான்’. இப்படம் நாளை மறுநாள் (12-6-15) வெளியாகிறது. சமீபத்தில் நடந்த இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், ‘என் படத்தின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய நான் யாரிடமும் கேட்டுக்கொள்ள போவது இல்லை, நானே சொந்தமாக ரிலீஸ் செய்யவிருக்கிறேன்’’ என்று கூறியிருந்தார் சந்தானம். ஆனால் இப்போது திடீர் திருப்பமாக ‘இனிமே இப்படித்தான்’ படத்தை சந்தானத்தின் நெருங்கிய நண்பரும், நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் வாங்கியிருக்கிறார். தமிழகம் முழுக்க இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயன்ட் மூவீஸ்’ நிறுவனம் வெளியிடவிருக்கிறது. இப்படத்தை சந்தானத்தின் உதவியாளர்கள் முருகன் – ஆனந்த் இயக்கியுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சக்க போடு போடு ராஜா - டிரைலர்


;