ஆபாச ரசிகரை விரட்டியடித்த விசாகா சிங்!

ஆபாச ரசிகரை விரட்டியடித்த விசாகா சிங்!

செய்திகள் 10-Jun-2015 8:58 AM IST Chandru கருத்துக்கள்

சமூக வலைதளங்களில் போலிக் கணக்கில் உலவும் ஒருசில ஆட்களால், பெண்களுக்கு எதிரான வார்த்தை வன்முறைகள் அதிகரித்துக் கொண்டேயிருக்கும் அசாதாரண சூழ்நிலையில், நடிகை விசாகா சிங் செய்த ஒரு காரியம் அனைத்தரப்பினர்களாலும் வரவேற்கப்பட்டிருக்கிறது. தனது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், நடிகை விசாகா சிங் தனது புகைப்படம் ஒன்றைப் பகிர, அதன் கமென்ட் பகுதியில் போலிக்கணக்கில் வந்து வக்கிரமான வார்த்தைகளைப் பதிவிட்டார் ரசிகர் ஒருவர்.

பொதுவாக ஃபேஸ்புக்கில் இது சாதாரணமாக எல்லா நடிகைகளும், பெண்களும் சந்திக்கும் தர்மசங்கடமான சூழ்நிலைதான் என்றாலும், மற்றவர்களைப்போல் மனதுக்குள் புளுங்கிவிட்டு நகர்ந்து செல்லாமல், நின்று நிதானமாக அந்த ரசிகருக்கு தன் கருத்துக்கள் மூலம் பதிலடி கொடுத்திருக்கிறார் விசாகா. அவரின் இந்த தைரியமான செயலை ஊடகங்கள், ஆண் ரசிகர்கள், பெண் ரசிகைகள் என அனைவரும் பாராட்டித் தள்ளியுள்ளனர். அதோடு இதுபோன்ற வக்கிரபுத்தி படைத்த ஆண்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்பதற்கு விசாகாவின் செயலே உதாரணம் எனவும் புகழ்ந்துள்ளனர்.

ஃபேஸ்புக்கில் விசாகாவின் அதிரடி நடவடிக்கை குறித்த இந்த செய்தி இந்திய அளவில் டிரென்ட் ஆகிக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு ஊர்ல ரெண்டு ராஜா - டிரைலர்


;