திருப்பதியில் வெளியாகும் ‘பாகுபலி’யின் பாடல்கள்!

திருப்பதியில் வெளியாகும் ‘பாகுபலி’யின் பாடல்கள்!

செய்திகள் 9-Jun-2015 5:49 PM IST Chandru கருத்துக்கள்

இந்திய சினிமா ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் ‘பாகுபலி’ படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி என 4 மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ள இந்த டிரைலரை இதுவரை 1 கோடி ரசிகர்களுக்கும் மேல் பார்வையிட்டுள்ளதாக தயாரிப்பு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 13ஆம் தேதி ‘பாகுபலி’ தெலுங்கு படத்தின் இசை வெளியீட்டு விழா திருப்பதியில் உள்ள தரக்கரம்மா ஸ்டேடியத்தில் வெளியாகவிருக்கிறது. மே 31ஆம் தேதியே பாடல்கள் வெளியிடப்போவதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. சிற்சில காரணங்களால் அப்போது பாடல் வெளியீட்டு விழா ஒத்தி வைக்கப்பட்டது. இப்போது திருப்பதியில் விழா நடைபெறுவது உறுதியாகி உள்ளது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதுபோல இந்த விழாவை நடிகர் நானி தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எம்.எம்.கீரவாணி இசையமைப்பில் உருவாகியிருக்கும் ‘பாகுபலி’ படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

ஜூலை 10ஆம் தேதி இப்படம் உலகமெங்கும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பாகுபலி 2 - பலே பலே பாடல் வீடியோ


;